×

வணிகம், தொழில் நிறுவனங்கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்

 

ஓசூர், நவ.5: ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓசூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், தொழில் உரிமக் கட்டணத்தை இணையதளம் வாயிலாக செலுத்தி தங்களது உரிமையினை புதுப்பித்து கொள்ள வேண்டும்.

மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தொழில் உரிமக்கட்டணம் விதிக்கப்பட வேண்டும். அதன்படி, அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தொழில் உரிமக் கட்டணத்தை, இணையதளத்தின் வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட உரிமத்தொகையை செலுத்தி புதுப்பித்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post வணிகம், தொழில் நிறுவனங்கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Hosur Corporation ,Commissioner ,Srikanth ,Dinakaran ,
× RELATED ஓசூர் பகுதியில் நாய் தொல்லை இரவு நேர...