×

தொழிற்சாலைகள் ஆன்லைனில் உரிமம் புதுப்பிக்க அக்.31 கடைசி நாள்

 

கோவை, அக். 11: கோவை, நீலகிரி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2025-ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பித்து கொள்ள வேண்டும். இதனை வரும் 31-ம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ள வேண்டும்.

எனவே, கோவை, நீலகிரி மாவட்டத்தில் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று உரிய உரிமைத்தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குனர் சீனிவாசகம் தெரிவித்தார்.

The post தொழிற்சாலைகள் ஆன்லைனில் உரிமம் புதுப்பிக்க அக்.31 கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore, Nilgiris District ,Dinakaran ,
× RELATED மாடியில் இருந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி