×

கொடுத்த கடனை திருப்பிக்கேட்டதால் சிறுமியை கடத்தி கொலை சடலம் கால்வாயில் வீச்சு: பெண்கள் உட்பட 3 பேர் கைது

திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூர் உபயதுல்லா கிராமத்தைச் சேர்ந்தவர் அசன்துல்லா. இவரது மனைவி சானியா. இவர்களது மகள் அஸ்வியா(6). கடந்த 1ம்தேதி வீட்டின் வெளியே விளையாடிய அஸ்வியாவை திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். 2 நாட்களுக்கு பிறகு அப்பகுதியில் உள்ள கால்வாய் தண்ணீரில் அஸ்வியா சடலமாக மீட்கப்பட்டாள். அஸ்வியா கொலை செய்யப்பட்டு தண்ணீரில் வீசப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அஸ்வியாவின் தந்தை அசன்துல்லாவிடம் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண், கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திரும்ப தருமாறு அசன்துல்லா தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், உறவினர்களுடன் சேர்ந்து வீட்டின் வெளியே விளையாடிய அஸ்வியாவை கடத்திச்சென்று கொலை செய்து கால்வாயில் வீசியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக நேற்று 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கொடுத்த கடனை திருப்பிக்கேட்டதால் சிறுமியை கடத்தி கொலை சடலம் கால்வாயில் வீச்சு: பெண்கள் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Asantulla ,Bunkanur Upayatulla ,Chittoor district ,Andhra Pradesh ,Sania ,Asvia ,Aswia ,
× RELATED திருமலையில் கடும் பனிமூட்டம் கடும்...