சென்னை: காஞ்சிபுரத்தை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் என்பவரின் மனைவி குணம்மாள் (56). இவர் திருத்தணியில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதற்காக திருத்தணியில் இருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து டவுன் பஸ் மூலம் தண்டலம் கிராமத்திற்கு திரும்பியுள்ளார். தண்டலம் கிராமத்தில் இறங்கி பார்த்தபோது தன்னுடைய பையில் வைத்திருந்த 4 சவரன் தங்க நகை திருடு போயிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக பொன்னேரிக்கரை காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அதே பேருந்தில் பயணம் செய்த ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த ராமு என்பவரின் மனைவி பூமி (25), பிச்சையா என்பவரின் மனைவி சுமித்ரா (35) ஆகிய 2 பெண்களையும் கைது செய்து, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஓடும் பேருந்தில் நகை திருடிய பெண்கள் கைது appeared first on Dinakaran.