×

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுச்சேரியில் இருந்து கடத்திய ரூ.5 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்: ஓட்டுனர் கைது

சென்னை: செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான புதுச்சேரி மாநில மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை அண்ணாநகர் பகுதிக்கு கார் மூலம் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு போலீசார் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வந்தனர்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை மடக்கி பிடித்து சோதனையிட்டபோது அதில் ஏராளமான புதுச்சேரி மதுபான பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், மதுபான பாட்டில்களை கடத்தி வந்தது வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (42) என தெரிய வந்தது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை கடத்திக்கொண்டு, அவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் விற்பனைக்கு எடுத்துச் செல்வதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தாமோதரனை கைது செய்த விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் செங்கல்பட்டு மதுவிலக்கு போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுச்சேரியில் இருந்து கடத்திய ரூ.5 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்: ஓட்டுனர் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,New Year's Eve ,Chennai ,Chengalpattu ,Viluppuram Zone Central Intelligence Unit ,Annanagar ,New Year ,Dinakaran ,
× RELATED கடற்கரையில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் தெருநாய்கள்