×

கொடநாடு கொலை வழக்கு இதுவரை 150 பேரிடம் விசாரணை

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், ஊட்டி நீதிமன்றத்தில் இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 28க்கு தள்ளிவைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு 3 ஆண்டுகளாக ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில இதுவரை 150க்கும் மேற்பட்ட சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நேற்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். அப்போது போலீஸ் தரப்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள வழக்கு விசாரணை குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து, விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என அரசு தரப்பு வக்கீல் மற்றும் போலீசார் கேட்டுக் கொண்டனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜனவரி 28ம் தேதிக்கு நீதிபதி சஞ்சய் பாபா ஒத்திவைத்தார். இது குறித்து அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் கூறுகையில், இவ்வழக்கில் இதுவரை 150 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், சாட்சிகள் கூறிய கருத்துக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளது. எனவே, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வழக்கு தொடர்பாக மேலும் சிலரை கைது செய்ய வேண்டி இருந்தால், கைது நடவடிக்கை தொடரும். வாளையார் மனோஜ் நிபந்தனை ஜாமீனை தளர்த்தக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இவ்வாறு அவர் கூறினார். முக்கிய குற்றவாளியான வாளையார் மனோஜ் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் ஊட்டியிலேயே தங்கி, வாரந்தோறும் திங்கட்கிழமை ஊட்டி நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிபந்தனையை தளர்த்தக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சஞ்சய் பாபா நேற்று தள்ளுபடி செய்தார்….

The post கொடநாடு கொலை வழக்கு இதுவரை 150 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Oodi ,Oodi court ,Dinakaran ,
× RELATED தேசிய வருவாய் வழி மற்றும் திறன்...