டரோபா: தென் ஆப்ரிக்காவுடன் நடந்த 2வது டி20 போட்டியில் 30 ரன் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. பிரையன் லாரா அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீச… வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவித்தது. ஆலிக் அதனேஸ் 28 ரன் (21 பந்து, 2 பவுண்டரி 2 சிக்சர்), ஷாய் ஹோப் 41 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), நிகோலஸ் பூரன் 19, ரோஸ்டன் சேஸ் 7, கேப்டன் பாவெல் 35 ரன் (22 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ஷெர்பேன் ரூதர்போர்டு 29 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.
ரொமாரியோ 9, அகீல் உசைன் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்க தரப்பில் லிசார்டு வில்லியம்ஸ் 3, பாட்ரிக் க்ரூகெர் 2, ஓட்னீல் பார்ட்மன் 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 19.4 ஓவரில் 149 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. ரிக்கெல்டன் 20 (13 பந்து, 2 சிக்சர்), ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 44 (18 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மார்க்ரம் 19 (9 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்டப்ஸ் 28 (24பந்து, 1பவுண்டரி, 1சிக்சர்), வாண்டெர் டுசன் 17 ரன் எடுத்தனர்.
13.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்திருந்த தென் ஆப்ரிக்கா, மேற்கொண்டு 20 ரன் மட்டுமே சேர்த்து 7 விக்கெட்டை பறிகொடுத்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரொமாரியோ 4 ஓவரில் 15 ரன்னுக்கு 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஷமார் ஜோசப் 3, அகீல் 2, மேத்யூ ஃபோர்ட், குடகேஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் 2-0 என முன்னிலைப் பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், கடைசி போட்டி இன்று நள்ளிரவு தொடங்கி நடைபெற உள்ளது.
The post மீண்டும் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா: டி20 தொடரை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் appeared first on Dinakaran.