×

குழந்தை ராமரை மீண்டும் கூடாரத்திற்கு அனுப்ப சதி: காங். மீது மோடி குற்றச்சாட்டு

கிரிதி: உபியின் வாரணாசி தொகுதியில் நேற்று காலை வேட்புமனு தாக்கல் செய்த பிரதமர் மோடி, அதன் பின் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்று கிரிதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அங்கு அவர் பேசியதாவது:
ராமர் கோயில் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் வெட்கக்கேடான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். மீண்டும் குழந்தை ராமரை கூடாரத்திற்கு அனுப்ப சதி செய்யும் காங்கிரஸ் தலைவர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராமர் கோயிலை மூட வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். ஜார்க்கண்டில் ஆளும் ஜேஎம்எம், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஊழல், சமாதானம் மற்றும் வாரிசு அரசியலின் மிகப்பெரிய முன்மாதிரியாக மாறியுள்ளன. இந்த தீமைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டுமென உறுதி எடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post குழந்தை ராமரை மீண்டும் கூடாரத்திற்கு அனுப்ப சதி: காங். மீது மோடி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Rama ,Modi ,Girithi ,UP ,Varanasi ,Jharkhand ,Congress ,Ram ,Dinakaran ,
× RELATED ராமன் எத்தனை ராமனடி