×
Saravana Stores

கனடா விசா பெற்று தருவதாக அமேசான் நிறுவன ஊழியரிடம் ரூ12.60 லட்சம் நூதன மோசடி: வாலிபரிடம் விசாரணை


சென்னை: கனடா விசா பெற்று தருவதாக அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணிடம் ரூ12.60 லட்சம் மோசடி செய்தவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆவடி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை சேர்ந்த சுதா (27), விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார். அதில், நான் அமேசான் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். வெளிநாடு செல்லும் ஆங்கில நுழைவு தேர்வு எழுத சென்ற போது, கோவிலம்பாக்கம் 200 அடி சாலையை சேர்ந்த அருண் சதீஷ் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது அவர், கனடா நாட்டில் பணிபுரிய விசா வாங்கி தருவதாக ரூ12.60 லட்சம் பெற்றார். ஆனால் அவர் சொன்னபடி கனடா நாட்டின் விசா வாங்கி தரவில்லை. இதனால் நான் கொடுத்த பணத்தை கேட்ட போது, அவர் தர மறுத்து வருகிறார். எனவே அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும், என்று கூறியிருந்தார். புகாரின்படி போலீசார் நந்தனத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அருண் சதீஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கனடா விசா பெற்று தருவதாக அமேசான் நிறுவன ஊழியரிடம் ரூ12.60 லட்சம் நூதன மோசடி: வாலிபரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Amazon ,Canada ,CHENNAI ,Sudha ,Avadi Tamil Nadu Urban Habitat Development Board ,Virugambakkam ,
× RELATED கனடாவின் பிராம்ப்டனில் கோயில் மீது...