×

உபியில் 6 மாதமாக நடந்த கொடூரம் நீட் மாணவியை பலாத்காரம் செய்த பயிற்சி ஆசிரியர்கள்: வீடியோ எடுத்து மிரட்டியதும் அம்பலம்

கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள நீட் பயிற்சி மையத்திற்கு கடந்த 2022ம் ஆண்டு மைனர் மாணவி பயிற்சிக்காக சென்றார். கடந்த ஜனவரி மாதம் உயிரியல் பயிற்சி அளிக்கும் 32 வயதான ஆசிரியர் சாஹில் சித்திக், மாணவியை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். மாணவி அங்கு சென்ற போது யாரும் இல்லை. அந்த தனிமையை பயன்படுத்திய ஆசிரியர் சாஹில் சித்திக், மாணவியை பலாத்காரம் செய்து வீடியோவில் படம் பிடித்தார்.

பின்னர் அதை வைத்து மிரட்டி 6 மாதமாக ஆசைக்கு இணங்க வைத்தார். இதே போல் நடந்த மற்றொரு விருந்தில் 39 வயதான வேதியியல் ஆசிரியர் விகாஸ் போர்வால் என்பவரும் மாணவியை பலாத்காரம் செய்தார். இந்தநிலையில் இதே போல் இன்னொரு மாணவியை ஆசிரியர் சாஹில் சித்திக் பலாத்காரம் செய்த காட்சிகள் வைரலாகி அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்ற மாணவியை உடனே கான்பூருக்கு வரும்படி மிரட்டினார். இதில் பயந்து போன மாணவி போலீசில் புகார் கொடுத்தார். அதை தொடர்ந்து போலீசார், பயிற்சி ஆசிரியர்கள் சாஹில் சித்திக், விகாஸ் போர்வால் ஆகியோரை கைது செய்தனர்.

The post உபியில் 6 மாதமாக நடந்த கொடூரம் நீட் மாணவியை பலாத்காரம் செய்த பயிற்சி ஆசிரியர்கள்: வீடியோ எடுத்து மிரட்டியதும் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Ubi ,Kanpur ,Neet Training Centre ,Kanpur, Uttar Pradesh ,Sahil Siddiq ,
× RELATED இந்து கோயில் இருப்பதாக வழக்கு உபி...