×

‘கஞ்சா அல்வா’ விற்ற இருவர் கைது

தென்காசி: ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் வாங்கி வந்து சிவகிரி அருகே கஞ்சா அல்வா விற்ற 17 வயது சிறுவன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ளாறு மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கருவட்டாம்பாறை பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

போலீசாரை கண்டதும் இருவர் தப்பியோடினர். அவர்களை வனத்துறையினர், போலீசார் விரட்டி மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், தேவர்குளம் அருகே உள்ள சுப்பையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த வெள்ளத்துரை மகன் ஈஸ்வரமூர்த்தி (21), அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், கஞ்சா பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 500 கிராம் எடையுள்ள கஞ்சா அல்வா மற்றும் 500 கிராம் கஞ்சா என 1 கிலோ கஞ்சா, 2 பைக்குகள், அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இருவரையும் சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ஈஸ்வரமூர்த்தியை பாளை சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

The post ‘கஞ்சா அல்வா’ விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Andhra ,Shivagiri ,Karuwattampara ,Nehru ,Shivagiri, Tenkasi District ,
× RELATED திடீரென பெய்த மழையால் நீர்வரத்து...