×

குஜராத் சிறுவன் கடத்திக்கொலை: சிஆர்பிஎப் வீரர் கைது

பரூச்: குஜராத்தில் 8வயது சிறுவனை கடத்தி கொலை செய்தது தொடர்பாக சிஆர்பிஎப் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப்பிரதேசத்தின் குவாலியரை சேர்ந்தவர் சைலேந்திர ராஜ்புத். இவர் சிஆர்பிஎப் காவலராக இருந்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கு பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கலேஷ்வர் நகரில் சுபம் ராஜ் என்ற 8வயது சிறுவனை கடத்தி ரூ.5லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து சிறுவனின்பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்பஉதவியின் மூலமாக மிரட்டல் விடுத்த ராஜ்புத் இருந்த இடத்தை போலீசார் கண்டறிந்தனர். அங்கு சிறுவனை ராஜ்புத் கொன்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

The post குஜராத் சிறுவன் கடத்திக்கொலை: சிஆர்பிஎப் வீரர் கைது appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Sailendra Rajput ,Gwalior, Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில்...