×

பிரதமர் அலுவலக அதிகாரியாக நடித்த கிரண் படேல் மீது ஈடி வழக்கு பதிவு

ஸ்ரீநகர்: குஜராத் மாநிலம், அகமதபாத்தை சேர்ந்த கிரண் படேல் என்ற சாதாரண நபர், பிரதமர் அலுவலகத்தின் உயரதிகாரி போன்று நடித்து மக்களை ஏமாற்றி வந்தார்். மூன்றாவது முறையாக ஜம்மு காஷ்மீர் சென்றபோது கடந்த மார்ச் மாதம் பாதுகாப்பு அதிகாரிகள் இவரை கைது செய்தனர். விசாரணையில் இவர் போலியாக நடித்து ஏமாற்றியது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் அமலாக்கத்துறை கிரண் படேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வருகிற 27ம் தேதி நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

The post பிரதமர் அலுவலக அதிகாரியாக நடித்த கிரண் படேல் மீது ஈடி வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : ED ,Kiran Patel ,Prime Minister's Office ,Srinagar ,Gujarat ,Ahmedabad ,Karan Patel ,Jammu and ,Kashmir ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர்...