- சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- தமிழ்நாடு அரசு
- தங்கவேல்
- தஞ்சவேலு
- தின மலர்
சென்னை: நிதி முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை பரிந்துரை செய்திருந்தது. இதைஎதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கவேலுவழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. உயர் கல்வித் துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று நீதிபதி கேட்டார்.
அதற்கு, தற்போதைய பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எல்.சந்திரகுமார், இது குறித்து சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார். அப்போது, நீதிபதி, முந்தைய பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்யும் பரிந்துரை மீது முடிவெடுக்காமல் ஏன் மீண்டும் அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள் என்று கேள்வி எழுப்பினார். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், துணைவேந்தர் மற்றும் தங்கவேல் கூட்டாக முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது என்றார். இதையடுத்து, முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தடை இல்லை. விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார்.
The post சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் மீதான நிதி முறைகேடு புகாரில் நடவடிக்கை எடுக்கலாம்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.