×

பெண்களுக்கு பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

ஆண்டிபட்டி, நவ. 26: ஆண்டிபட்டி நகரில் பெண்களுக்கு பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி எம்எல்ஏ, கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, ஆண்டிபட்டி நகரில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார பேரணியினை கலெக்டர் ஷஜீவனா மற்றும் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் ஆகியோர் தலைமையில் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை தொடர்ந்து, சர்வதேச மனித உரிமைகள் தினம் டிச.10ம் தேதி வரை உள்ள 16 நாட்களுக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு பணிகள் நடைபெற உள்ளது. நேற்று தொடங்கிய இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் எந்தியவாறு பேரணி நடைபெற்றது.

பேரணியானது ஆண்டிபட்டி அரசு மருத்துவனையிலிருந்து தொடங்கி மதுரை ரோடு வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு வரை சென்று நிறைவடைந்தது. இந்நிகழ்வில் மாவட்ட சமூக அலுவலர் செல்வி சியாமளா தேவி, ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராமலிங்கம், ஆண்டிபட்டி மருத்துவமனை மருத்துவர் பிரேமலதா, திமுக பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள், செவிலியர் கல்லூரி மாணவியர்கள், கைம்பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வருசநாடு வைகை பெண்கள் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் தும்மக்குண்டு கிராமத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் பொன்னழகு சின்னக்காளை ததொடங்கி வைத்தார். வருசநாடு எஸ்ஐ கருப்பையா, முன்னாள் ஊராட்சி தலைவர் சின்னக்காளை, வைகை மகளிர் கூட்டமைப்பு நிர்வாக இயக்குநர் விஜயராணி, வைகை அக்ரி ரிசோர்ஸ் சென்டர் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்து பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்து பேசினர்.

The post பெண்களுக்கு பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Antipatty ,MLA ,Awareness Rally against ,-Based ,for Women ,
× RELATED ஆண்டிபட்டி அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு!!