×

பட்டறை உரிமையாளர் தற்கொலை

நாமக்கல், மார்ச் 11: நாமக்கல் அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(54). இவர், சேலம் சாலையில் மெக்கானிக் பட்டறை நடத்தி வந்தார். கடந்த ஓராண்டாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பட்டறைக்கு சென்றவர், இரவு வீடு திரும்பவில்லை. இதனால், திடுக்கிட்ட குடும்பத்தினர் பட்டறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு சுரேஷ் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே, அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Namakkal ,Suresh ,Anbu Nagar ,Salem Road ,
× RELATED வையப்பமலையில் புதிய மலைப்பாதை திறப்பு விழா