×

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம், மார்ச் 11: சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், காஸ் சிலிண்டர் விலை குறைக்க கோரியும், தட்டுப்பாடு இன்றி காஸ் சிலிண்டர் வழங்க கோரியும் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்தும் சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டி பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் சுதா தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் சாரதா தேவி பேசினார். காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர துணை தலைவர் கோபிகுமரன், நிர்வாகிகள் ராமன், நாகராஜ், மயில்முருகன், தனபாக்கியம், பத்மாவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Congress ,Salem ,Nanjamapatti ,Salem Ammapettai ,Union government ,Salem Metropolitan District Congress.… ,
× RELATED வெள்ளிப்பட்டறை தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி