×

வணிக திருவிழா போட்டி

கிருஷ்ணகிரி, மார்ச் 11: கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் மற்றும் வணிக கணினி பயன்பாட்டியல் துறைகளின் சார்பில் வணிக திருவிழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தனபால் தலைமை வகித்து பேசினார். கல்லூரி வணிகவியல் மற்றும் வணிக கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் ஜெகன் வரவேற்றார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த வணிகவியல் துறை மாணவ, மாணிவகள் கலந்து கொண்டனர்.

இதில் ஆய்வு கட்டுரைகளை வாசித்தல், காட்சி விளக்க படம் மூலம் கருத்துக்களை எடுத்து கூறுதல், சந்தைப்படுத்துதலின் நுட்பங்கள் குறித்து விளக்குதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன. இதில் ஒட்டுமொத்தமாக பல்வேறு போட்டிகளில் பெங்களூருவை சேர்ந்த கிறிஸ்ட் கல்லூரி முதலிடம் பிடித்தது. விழாவில் கல்லூரியில் அனைத்து நாட்களும் வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் வாரியாக பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வணிகவியல் துறை உதவி பேராசிரியர்கள் விமலா, நாகேஸ்வரி, மேலாண்மை இயல்துறை தலைவர் வெங்கடேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். வணிகவியல் துறை உதவி பேராசிரியை ரஞ்சிதா நன்றி கூறினார்.

Tags : Business Festival Competition ,Krishnagiri ,Arignar Anna Arts and Science College ,Polupalli ,College ,Principal ,Dhanapal ,
× RELATED ஆண்டு விழா கொண்டாட்டம்