- மகளிர் தினம்
- சங்ககிரி
- சர்வதேச மகளிர் தினம்
- சண்முகா கல்வி நிறுவனங்கள்
- திருமூர்த்தி ஆறுமுகம்
- முதன்மை இயக்குநர்
- கல்வி நிறுவனங்கள்
- ஆகமம் 360
- சண்முகம்
- கல்விக்கூடம்
- நிறுவனங்கள்
சங்ககிரி, மார்ச் 11: சங்ககிரி சண்முகா கல்வி நிறுவனங்களில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் முதன்மை இயக்குநர் மற்றும் ஆக்கம் 360 நிறுவனர் திருமூர்த்தி ஆறுமுகம் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம், இணை செயலாளர் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மக்கள் தொழில் முனைவர் மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் வாணி கோபாலகிருஷ்ணன், மென்திறன் நிபுணர் கார்ப்பரேட் பயிற்சியாளர் சங்கீதா ராமணன், நற்பவி ஆரோக்கிய நிறுவனர் மற்றும் தியான பயிற்சியாளர் புவனா நகுல், வாழ்க்கை திறன் பயிற்சியாளர் மற்றும் முதன்மை மென்திறன் பயிற்சியாளர் கௌசியா ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகள் தங்களின் கேள்விகளை முன்வைத்து, சிறப்பு விருந்தினர்களிடமிருந்து ஊக்கமளிக்கும் வகையில் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் பெற்றனர். பெண்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
