பாலக்கோடு, மார்ச் 11: பாலக்கோடு பேரூராட்சியில், மாதாந்திர மன்ற கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது. இதில் பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாலக்கோடு பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில், மாதாந்திர மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் பி.கே.முரளி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் இந்துமதி, துணைத் தலைவர் தாஹசீனா இதயாத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் பத்மா வரவு செலவு கணக்குகள் சமர்ப்பித்தார். இதையடுத்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாலக்கோடு பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அண்ணா துவக்கப்பள்ளி, நூற்றாண்டு துவக்கப்பள்ளி, அக்ரஹகாரம் துவக்கப்பள்ளி, கல்கூடப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, உருது துவக்கப்பள்ளிகளில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் மோகன், சாதிக்பாஷா, சரவணன், ரூஹித், விமலன், குருமணி, ஜெயந்தி மோகன், லட்சமி ராஜசேகர், பிரியாகுமார், தீபா, ஆயிஷா, சிவசங்கரி, நாகலட்சுமி, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக புதிய பேரூராட்சி மன்ற கட்டிடத்தை தலைவர் முரளி திறந்து வைத்தார்.
