×

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா வெல்லும்: ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: இந்தியா-நியூசிலாந்து இடையிலான அரை இறுதி கிரிக்கெட் போட்டி, மும்பையில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியை காண்பதற்காக, மும்பை சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை 6.45 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை திரும்பினார். அப்போது, நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மும்பையில் நடந்த இந்தியா -நியூசிலாந்து இடையிலான 2023 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியை நேரில் பார்த்தது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இறுதிப் போட்டியில் இந்தியா நிச்சயம் வெல்லும். உலகக் கோப்பை இந்தியாவுக்கு தான். அரையிறுதி போட்டியை நேரில் பார்க்கும்போது, முதலில் கொஞ்சம் டென்ஷனாக இருந்தது. அதன் பின்பு விக்கெட்டுகள் விழ தொடங்கிய பின்பு மகிழ்ச்சியாக இருந்தது. உலகக் கோப்பை 100% இந்தியாவிற்கு தான். அரை இறுதி போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முகமது சமி 100% காரணம். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

The post உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா வெல்லும்: ரஜினிகாந்த் பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Cricket World Cup Final ,Rajinikanth ,Chennai ,New Zealand ,Mumbai ,Mumbai… ,World Cup cricket ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...