×

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே ஓபிஎஸ் நிலைப்பாடு: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே ஓபிஎஸ் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பின் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் நேரத்தில் சசிகலாவை ஓபிஎஸ் சந்திப்பார். அடிவாங்கிய ஹீரோ கடைசியில் வில்லனை வீழ்த்துவதுபோல் வழக்குகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். நீதிமன்ற உத்தரவின்படி கார்களில் அதிமுக கொடி அகற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.

The post அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே ஓபிஎஸ் நிலைப்பாடு: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : OPS ,AIADMK ,minister ,Vaithilingam ,CHENNAI ,Former minister ,Dinakaran ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...