- திருவண்ணாமலை மாவட்டம்
- சாத்தனூர் அணை
- தென்பெனாய் நதி
- Thandarampattu
- திருவண்ணாமலை
- மாவட்டம்
- தென்பெனாய் நதி
- டென்னெனாய் நதி
- தின மலர்
தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி 1000 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழிப்புரம் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் கட்டப்பட்டுள்ள 117 அடி உயரமுள்ள அணையில் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது. இந்த அணையின் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஏராளமான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகிறது.
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக எல்லையில் பெய்து வரும் பருவமழை காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் மழை காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து 3,300 கனஅடியாக உள்ளது.
இதனால் சாத்தனூர் அணையின் மொத்த உயரமான 119 அடியில் தற்போது 116.75 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி மின்சாரம் தயாரிக்கப்படும் மதகு வழியாக 1000 கனஅடி நீர் திறப்பது வழக்கம். முதற்கட்டமாக இன்று காலை 1000கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் மின்சாரம் தயாரிக்கப்பட்ட பின்னர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. மீதமுள்ள உபரி நீர் முழுவதும் 11கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்படும் என சாத்தனூர் அணை உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழிப்புரம் ஆகிய மாவட்ட கரையோர மக்களுக்கு ெவள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, கடந்து செல்லவோ, கால்நடைகளை இறக்கவோ கூடாது என வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர் தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
The post திருவண்ணாமலை மாவட்டம்; சாத்தனூர் அணையில் 1000 கனஅடி நீர் திறப்பு: தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.
