×

கிருஷ்ணகிரியில் தேசிய வேளாண் சந்தை, பண்ணை வர்த்தகம் குறித்த தொழிற்பயிற்சி

*கலெக்டர் தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் பண்ணை வர்த்தகம் குறித்த தொழிற்பயிற்சியை, கலெக்டர் தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை தர்மபுரி விற்பனை குழு சார்பில், மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் பண்ணை வர்த்தகம் தொடர்பாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கான தொழிற்பயிற்சி நடந்தது. பயிற்சியை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து பேசியதாவது:

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கான தொழிற்நுட்ப பயிற்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மின்னணு தேசிய வேளாண் சந்தையை செயல்படுத்தும் அமைப்பு, சிறு விவசாயிகளின் வேளாண் வணிக கூட்டமைப்பு என்ற ஒன்றிய விவசாய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பாகும். விவசாய விளைபொருட்களின் பான்- இந்திய வர்த்தகத்தை எளிதாக்குவதற்கு, ஒரு பொதுவான ஆன்லைன் சந்தை வலை தளத்தின் மூலம், முதலில் மாநிலங்களின் அளவிலும் இறுதியில் நாடு முழுவதும் சந்தைகளை ஒருங்கிணைந்த பரிவர்த்தனை நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல் ஆகும். விவசாயிகள் விளைபொருட்களை அவர் இருப்பிடத்தில் இருந்து, ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம். பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இத்திட்டம் குறித்து விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நம் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வண்ணம், வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், விவசாயிகளிடையே இத்திட்டத்தை கொண்டு சென்று, மாநிலத்தில் முதல் மாவட்டமாக செயல்பட ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் காளிமுத்து, தர்மபுரி விற்பனைக் குழு செயலாளர் ரவி மற்றும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

The post கிருஷ்ணகிரியில் தேசிய வேளாண் சந்தை, பண்ணை வர்த்தகம் குறித்த தொழிற்பயிற்சி appeared first on Dinakaran.

Tags : National ,Market ,Krishnagiri ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...