×

நாளை முதல் குடிநீர் வரி கட்டணங்கள் ரொக்கமாக பெறப்பட மாட்டாது : சென்னை குடிநீர் வாரியம்

சென்னை : நாளை முதல் குடிநீர் வரி கட்டணங்கள் ரொக்கமாக பெறப்பட மாட்டாது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

*அனைத்து பகுதி அலுவலகங்களில் செயல்பட்டுவரும் வசூல் மையங்கள்
வழக்கம் போல் இயங்கும்,

*பணிமனை அலுவலகங்களில் தற்போது செயல்பட்டுவரும் வசூல் மையங்கள் 01.10.2023 முதல் செயல்படாது.

*குடிநீர் / கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்தும் நுகர்வோர்களின் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் பணிமனை அலுவலகங்களில் காசோலை / வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

*சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டண நுழைவாயிலைப் (online Gate Way) மற்றும் நெட் பேங்கிங் (Net Banking) மூலமாக பணம் செலுத்தலாம்.

*UPI, QR குறியீடு மற்றும் Pos போன்ற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் / கழிவு நீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாளை முதல் குடிநீர் வரி கட்டணங்கள் ரொக்கமாக பெறப்பட மாட்டாது : சென்னை குடிநீர் வாரியம் appeared first on Dinakaran.

Tags : Chennai Drinking Water Board ,Chennai ,
× RELATED சாலைகள், குடியிருப்புகளில்...