×

செங்கல்பட்டு கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து: 4 மணி நேரப் போராட்டத்திற்கு பின் தீ அணைப்பு

செங்கல்பட்டு: மறைமலைநகரில் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து 4 மணி நேர போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் செயல்பட்டு வரும் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் எளிதில் தீ பற்றும் கேபிள் ஒயர் போன்ற பொருட்கள் இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அந்த பகுதியர் புகை மூட்டமாக காணப்பட்டது. இதை அடுத்து செங்கல்பட்டு, ஒரகடம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்படும் போது தொழிலாளர்கள் அனைவரும் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிவிட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

The post செங்கல்பட்டு கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து: 4 மணி நேரப் போராட்டத்திற்கு பின் தீ அணைப்பு appeared first on Dinakaran.

Tags : Sengalpattu ,Chengalpattu ,Kiramalai Nagar ,Chengalpattu… ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...