×

நாளை 8ம் வகுப்பு ரிசல்ட்

சென்னை: தனித் தேர்வர்களுக்காக ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்த எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எட்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை தனித்தேர்வர்கள் ஆகஸ்ட் 7ம் தேதி எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 29ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. மேற்கண்ட இணையதளத்தில் நோட்டீபிகேஷன் என்ற ஐகானை கிளிக் செய்து அதில் ஐஎஸ்எல்சி ( தனித் தேர்வு) என்ற பக்கத்தில் ரிசல்ட் என்பதை கிளிக் செய்தால் தேர்வு எழுதிய மாணவர்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

The post நாளை 8ம் வகுப்பு ரிசல்ட் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...