×

பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் காலனி என்ற பெயரை நீக்க கோரி மனு: அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: திருச்சி மணப்பாறை அருகே பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் காலனி என்ற பெயரை நீக்கக் கோரிய வழக்கு தொடர்பாக திருச்சி ஆட்சியர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் வகுப்பினர் வசிக்கும் பகுதிகள் காலனி, சேரி, குப்பம் என பாரபட்ச மான பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இதனால் தீண்டாமை கொடுமை, ஜாதி வன்முறைகள் அதிகரிக்கும். இந்த பாரபட்சமான அடையாளங்களை குறிப்பிடுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. திருச்சியைச் சேர்ந்த பிரதீப் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் கீழையூர் என்றே இருந்தது. பஞ்சாயத்து தலைவர் உயர் ஜாதி என்பதால் நாங்கள் வசிக்கும் பகுதியை கீழையூர் காலனி என்று பெயரிட்டுள்ளார். கீழைபூர் காலனி என்று வருவாய், பஞ்சாயத்து ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் வசிக்கும் பகுதியை காலனி என தனி பகுதியாக பிரித்து பெயர் சூட்டுவது சட்டத்துக்கு புறம்பானது. எனவே, விசாரணை நடத்தி ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்துக்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.

The post பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் காலனி என்ற பெயரை நீக்க கோரி மனு: அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Colony ,ICourt Branch ,Madurai ,Tiruchi Manaparai ,Court Branch ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...