×

நாடாளுமன்றத்தில் நடக்க இருப்பது சிறப்பு கூட்ட தொடர் இல்லை: நிர்மலா சீதாராமன் பேட்டி

சென்னை: நாடாளுமன்றத்தில் நடைபெற இருப்பது சிறப்பு கூட்டத் தொடர் இல்லை. அது வழக்கமான நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அளித்த பேட்டி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. அது சிறப்பு கூட்டத் தொடர் கிடையாது. கூட்டத்தில் என்னென்ன மசோதாக்கள் பல தாக்கல் செய்யப்பட உள்ளது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் சாசனப்படி, உறுதிமொழி எடுத்துக் கொண்டு அமைச்சராக பொறுப்பு ஏற்கிறோம். எந்தவொரு மக்களுக்கும், இன்னொரு மக்களுக்கும் இடையே விரோதம் வரும் வகையில் பேசக்கூடாது, எதுவும் செய்யக்கூடாது. வன்முறையே கூடாது என்று நான் சொல்லும்போது, அமைச்சர் தலைக்கு விலை வைத்ததை எப்படி நான் சரி என்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

The post நாடாளுமன்றத்தில் நடக்க இருப்பது சிறப்பு கூட்ட தொடர் இல்லை: நிர்மலா சீதாராமன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Parliament ,Nirmala Sitharaman ,Chennai ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...