சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா செல்லும் வனச்சாலையில் வனத்துறையினரின் ஜீப் வாகனம் சென்று கொண்டிருந்தபோது சாலையோர வனப்பகுதியில் இருந்த தந்தத்துடன் கூடிய ஆண் காட்டு யானை திடீரென வனத்துறையின் வாகனத்தை துரத்த முற்பட்டு சாலைக்கு ஓடி வந்தது.
அப்போது ஜீப் ஓட்டுநர் லாவகமாக வாகனத்தை இயக்கியதால் காட்டு யானை ஜீப் வாகனத்தை கண்டு அஞ்சியபடி பின்னோக்கி ஓடியது. சிறிது தூரம் ஓடிய காட்டு யானை பின்னர் சாலையோர வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
The post வனத்துறையின் வாகனத்தை துரத்திய காட்டு யானை. சமயோசிதமாக வாகனத்தை இயக்கி யானையை விரட்டிய ஓட்டுனர். சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.
