×

வால்பாறையில் கடும் குளிர், மூடுபனி

*புகைப்படம் எடுத்து செல்லும் சுற்றுலா பயணிகள்

வால்பாறை : வால்பாறையில் நீடித்து வரும் சாரல் மழையால் மூடு பனி நிலவுகிறது.கோவை மாவட்டம், வால்பாறையில் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்யாத நிலையில், தற்போது இடியுடன் கூடிய சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. வாட்டர் பால்ஸ் எஸ்டேட் முதல் சோலையார் அணை வரை பெய்து வரும் சாரல் மழையால் மீண்டும் சிற்றருவிகள், ஓடைகள் உயிர் பிடிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் வால்பாறையின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை பனி மூட்டமாக இருந்தது. இதில், கவர்கல் எஸ்டேட் பகுதியில் மூடு பனியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து சென்றனர்.

The post வால்பாறையில் கடும் குளிர், மூடுபனி appeared first on Dinakaran.

Tags : Valparai ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...