×

பள்ளிப்பட்டு பகுதியில் திமுக திண்ணை பிரசாரம்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றிய திமுக சார்பில், நாடாளுமன்ற தேர்தலுக்கான திண்ணை பிரசார கூட்டங்கள் நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான திண்ணை பிரசார கூட்டம் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சார்பில், ராமாபுரம், காக்களூர் ஆகிய கிராமங்களில் ஒன்றிய செயலாளர் ரவீந்திரா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் பேச்சாளர் வண்ணை புகாரி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

பள்ளிப்பட்டு ஒன்றிய குழு துணைத் தலைவர் பாரதி, ஒன்றிய நிர்வாகிகள் கோவிந்தசாமி, நதியா நாகராஜன், கோபி, அன்பழகன், குருநாதன், வடக்கு ஒன்றிய நிர்வாகி வெங்கட பெருமாள், சஞ்சிவி ராஜு, ராமாபுரம் சேகர், பட்டடை வெங்கடேசன், ரவிச்சந்திரன், உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

பள்ளிப்பட்டு மத்திய ஒன்றிய திமுக சார்பில், குமாராஜிபேட்டை, மேளப்பூடி ஆகிய கிராமங்களில் ஒன்றிய பொறுப்பாளர் சந்திரன் தலைமையில் திண்ணை பிரசார கூட்டங்கள் நடைபெற்றது. மேளப்பூடி கிளை செயலாளர் இறைதூதர் எத்திராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரத்தில் தலைமை கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா பங்கேற்று சிறப்புரையாற்றினார். பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரவிந்திரநாத், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முரளிசேனாஉட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பள்ளிப்பட்டு பகுதியில் திமுக திண்ணை பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Pallipattu ,Tiruvallur West District Pallipattu Union DMK ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு...