×

மாட்டுப்பட்டி அணைப்பகுதியில் உலா வரும் காட்டுயானைகள்: புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றலாப் பயணிகள்

மூணாறு: மூணாறு அருகே, மாட்டுப்பட்டி அணைப்பகுதியில் உலா வரும் காட்டு யானைகளை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறிலிருந்து 13 கி.மீ தொலைவில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மாட்டுப்பட்டி அணைக்கட்டு உள்ளது. இப்பகுதியில் பசுமையான புல்வெளிகள் உள்ளன. அணைக்கட்டின் நீர்த்தேக்கம் அருகே உள்ள புல்மேடு பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக கொம்பன் யானை உள்ளிட்ட 4 காட்டு யானைகள் ஜாலியாக உலா வருகின்றன.

அணை அருகே இந்தோ-சுவிஸ் கால்நடை வளர்ப்பு மையத்திற்கு சொந்தமான பகுதியில், மலைக்குன்றுகளில் வளர்ந்து நிற்கும் புற்களை மேய்ந்து திரியும் யானை கூட்டங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவருகிறது. தற்போது ஓணம் விடுமுறை என்பதால் புல்வெளிகளில் மேயும் காட்டு யானைகளை சுற்றுலாப் பயணிகள் படம் எடுத்து மகிழ்கின்றனர்.

The post மாட்டுப்பட்டி அணைப்பகுதியில் உலா வரும் காட்டுயானைகள்: புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றலாப் பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Mattupatti Dam ,Munnar ,Kerala… ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...