×

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு ஊட்டியில் மாரத்தான் ஓட்டம்

ஊட்டி: சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு ஊட்டியில் மாரத்தான் ஓட்டப் போட்டி நடந்தது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டியில் இன்று காலை மாரத்தான் ஓட்டப் போட்டி நடந்தது. மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியை நீலகிரி எஸ்பி., பிரபாகர் துவக்கி வைத்தார். போட்டியில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் துவங்கி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை, கூடலூர் சாலை வழியாக ஹில் பங்க் தமிழக மாளிகை அடைந்தது. அங்கிருந்து மீண்டும் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மைதானத்தை வந்து அடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இளைஞர் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அரசு மற்றும் விளையாட்டு துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

The post சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு ஊட்டியில் மாரத்தான் ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Marathon ,Ooty ,International Youth Day ,International ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...