×

மேற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ பங்கேற்பு

திருவள்ளூர்: மேற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் திராவிடபக்தன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆதிசேசன், குருதாஸ், குமரன், ஜெயபாரதி, உதயமலர் பாண்டியன், சிட்டிபாபு, கிஷோர், சுப்பிரமணியம், ராஜேஸ்வரி ரவீந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ரவிச்சந்திரன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிரண் ஆகியோர் வரவேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ சிறப்புரையற்றினார்.

இந்த கூட்டத்தில், விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 31ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்திற்கு வருகை தர இருப்பதால் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட எல்லையான ஒண்டிக்குப்பம் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை இரு வண்ணக் கொடி ஏந்தி பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது, மேலும் அன்று மாலை மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்திற்கு இளைஞர்கள் பெருந்திரளாக வெள்ளை சீருடையில் கலந்து கொள்வது, அதேபோல் வருகின்ற டிச. 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திலிருந்து அனைவரும் அணி திரண்டு கலந்து கொள்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், அரிகிருஷ்ணன், மகாலிங்கம், ரமேஷ், ஆர்த்தி ரவி, சந்திரன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மோதிலால், சுகுமார், பாபு, புவனேஷ்குமார், மிஸ்டர் தமிழ்நாடு திலீபன், முரளி சேனா, களம்பாக்கம் பன்னீர்செல்வம், சரஸ்வதிசந்திரசேகர், நாகராஜ், சித்திக் அலி, விஜயகுமார், அருண்குமார், ஆனந்தன், கிஷோர், பன்னீர்செல்வம், ஜெகஜீவன்ராம், மதுசூதனன், கோபால், தாடி நந்தகோபால், சீனிவாசன், ரவி, சதீஷ்குமார், பிரபாகரன், பவளவண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post மேற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : West District DMK Consultative Meeting ,S. Chandran ,MLA ,Tiruvallur ,Western ,district DMK ,District Assembly ,President ,Dravidapakthan ,West District DMK Council ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...