![]()
சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை கண்டுகளிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பூங்கா நிர்வாகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாரந்தோறும் பராமரிப்பு பணிக்காக செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை விடுவது வழக்கம். ஆனால் நாளை 29ம் தேதி செவ்வாய் கிழமை அன்று ஓணம் பண்டிகை வருகிறது. எனவே, வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை வழக்கம்போல் திறந்திருக்கும். இவ்வாறு பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
The post வண்டலூர் உயிரியல் பூங்கா ஓணம் பண்டிகையன்று இயங்கும் appeared first on Dinakaran.
