×

ஊட்டியில் 2ம் சீசன் நெருங்கியது தேயிலை பூங்கா சீரமைப்பு பணி தீவிரம்

ஊட்டி: 2ம் சீசன் நெருங்கிய நிலையில் ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் உள்ள புல் மைதானங்களை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருப்பினும், முதல் மற்றும் 2ம் சீசனின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கையாக உள்ளது. முதல் சீசனின் போது தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால், 2ம் சீசன் போது வட மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இதற்காக, முதல் சீசன் போன்றே 2ம் சீசனிலும் அனைத்து பூங்காவையும் தோட்டக்கலை துறை தயார் செய்வது வழக்கம். இந்நிலையில் 2ம் சீசன் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யும் பணியில் தோட்டக்கலை துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டா பகுதியில் உள்ள தேயிலை பூங்காவையும் தற்போது தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்ட நிலையில், புல் மைதானங்கள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இங்குள்ள புல் மைதானங்கள் சமன் செய்யப்பட்ட நிலையில், தற்போது பச்சை கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கிறது. இதற்கு நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சி சீரமைக்கும் பணியில் தொடர்ந்து பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஊட்டியில் 2ம் சீசன் நெருங்கியது தேயிலை பூங்கா சீரமைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Oodi ,Totapetta Tea Park ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...