×
Saravana Stores

தீபாவளி சீட்டு நடத்தி ரூ57.72 லட்சம் மோசடி; ஒருவர் கைது: தம்பதி தலைமறைவு

ஆவடி: தீபாவளி சீட்டு நடத்துவதாக ஆசிர்வாத்தை கூறி 18 நபரிடம் ரூ57.72 லட்சம் மோசடி செய்ததில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் தம்பதியினர் தலைமறைவாகி உள்ளனர். திருநின்றவூர் சுதேசி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவிகா(55). இவர், கடந்த மே மாதம் 29ம் தேதி ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், ஆவடி அடுத்து திருநின்றவூர் தசரதபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(50). இவரது மனைவி உமயபார்வதி(40). இந்த தம்பதியினரின் பக்கத்து வீட்டில் நான் வசித்து வந்ததால் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் மூலமாக உமன் சோசியல் வெல்ஃபேர் அசோசியன் நடத்தி வரும் கே.முரளி என்பவர் அறிமுகமானார்.

தீபாவளி சீட்டு மற்றும் பட்டாசு பண்டு நடத்தி வருவதாக கூறினர். அவர்கள், கூறிய ஆசை வார்த்தைகளை கேட்டு ஜனவரி 2021 முதல் நவம்பர் 2022வரை ஒரு சீட்டு ரூ2,00,000 என மொத்தம் இரண்டு சீட்டு ரூ4,00,000 செலுத்தினேன். சீட்டின் கடைசி ஏலத்திற்கு சென்றபோது வீடு பூட்டி இருந்தது. இதனால், அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் என்னை போன்று 18 நபர்கள் ஏல சீட்டு கட்டி வந்தது தெரியவந்தது. மேலும், மூன்று நபர்களும் வீடு மற்றும் அலுவலகத்தை பூட்டிவிட்டு தலைமறைவானதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையரகத்தில் மே மாதம் புகார் அளித்துள்ளேன் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையர் சங்கர், துணை ஆணையர் பெருமாள் தலைமையில், மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், மூவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முரளியை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மொத்தம் 18 பேர்களிடம் ரூ57,72,000 ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் தலைமறைவாகி உள்ள தம்பதியினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post தீபாவளி சீட்டு நடத்தி ரூ57.72 லட்சம் மோசடி; ஒருவர் கைது: தம்பதி தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Diwali ,Dinakaran ,
× RELATED மக்கள் அதிகம் கூடும் கடை வீதிகள்,...