- சென்னை பெருநகர போலீஸ்
- ஆணையாளர்
- ஜந்திப் ராய் ரத்தோர்
- புலான் புலனாய்வுப் பிரிவு காவல் அணி
- சென்னை
- சென்னை பெருநகர போலீஸ் ஆணையர்
- புலான் புலனாய்வுப் பிரிவு காவல் அணி
- பெருநகர போலீஸ் கமிஷனர்
- ஜங்ஷன் ராய் ரத்தோர்
- தின மலர்
![]()
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர், புதிதாக தொடங்கப்பட்ட புலன் விசாரணை பிரிவு காவல் குழுவினருக்கு பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார். கனம் உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் வழிகாட்டுதலின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் நிலையங்களில் உள்ள முக்கிய வழக்குகளை விசாரிக்கவும், விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சென்னை பெருநகர காவலில் உள்ள 12 காவல் மாவட்டங்களில், 12 புலன் விசாரணை பிரிவு காவல் நிலையங்கள் (Investigation Wing -IW) துவங்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப., மேற்படி புதிதாக தொடங்கப்பட்ட புலன் விசாரணை பிரிவு காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான 3 நாட்கள் பயிற்சி முகாமினை இன்று (27.07.2023) காவல் ஆணையரகத்தில் துவக்கி வைத்தார். இப்பயிற்சி முகாமில், சட்ட வல்லுநர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அரசு வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற மூத்த அரசு வழக்கறிஞர்கள், தடய அறிவியல்துறை நிபுணர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு, வழக்கு விசாரணை தொடர்பான புதிய யுத்திகள், விசாரணை கையாளும் முறை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்து ஆலோசனைகள் வழங்கினர்.
இந்த புலன் விசாரணை பிரிவு காவல் நிலையங்கள் வருகிற 01.08.2023 முதல் சென்னை பெருநகர காவலில் உள்ள 12 காவல் மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் செயல்படும் எனவும், இப்பிரிவினர் நிலுவையிலுள்ள முக்கிய வழக்குகளான கொலை, ஆதாயக்கொலை, கொள்ளை, வழிப்பறி, சந்தேக மரணம், ஆட்கடத்தல், வெடிபொருள் வழக்குகள், மத, சாதி ரீதியான மோதல் வழக்குகள் மற்றும் காவல் ஆணையாளர் குறிப்பிடும் வழக்குகளை விரைந்து விசாரணை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்வார்கள் என காவல் ஆணையாளர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) லோகநாதன், இ.கா.ப., துணை ஆணையாளர்கள் ராதாகிருஷ்ணன், (தலைமையிடம்) சீனிவாசன் (நிர்வாகம்), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
The post புதிதாக தொடங்கப்பட்ட புலன் விசாரணை பிரிவு காவல் குழுவினருக்கு பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர் appeared first on Dinakaran.
