×

வாணியம்பாடியில் அதிகாரிகள் அதிரடி சாலையில் இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு

*உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு

வாணியம்பாடி : வாணியம்பாடியில் சாலையில் இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி அதிகாரிகள் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடுவே ஆங்காங்கே சுற்றித் திரிவதாக வாணியம்பாடி நகராட்சி நிர்வாகத்தினருக்கு தொடர் புகார்கள் வந்தது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகள் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

அதன்படி, வாணியம்பாடி சி.என்.ஏ சாலை பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றி திரிந்த மூன்று மாடுகளை பிடித்து வந்த நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகளை பொதுவெளியில் விட்டதற்காக மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் ₹3 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், இனி வரக்கூடிய நாட்களில் பொதுவெளியில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post வாணியம்பாடியில் அதிகாரிகள் அதிரடி சாலையில் இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...