×

சாலையோர மரங்கள், பூங்காக்களில் பசுமை பெயிண்ட் சிவகாசி மாநகராட்சியை பசுமையாக்க புதுமுயற்சி

*பொதுமக்கள் பாராட்டு

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்கள், சாலையோர மரங்கள், பாலங்கள், ரவுண்டானா போன்ற இடங்களில் பசுமை வண்ணங்களில் பெயிண்ட் அடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.சிவகாசி மாநகாட்சியாக தரம் உயத்தப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து டிவைடர்கள் அமைத்து விளக்குகள் பொருத்தப்படுகிறது. மாநகராட்சி சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.

மாநகராட்சி பகுதியில் உள்ள பொத்துமரத்து ஊரணி, சிறுகுளம், பெரியகுளம் கண்மாய் தூர்வாரப்பட்டு மழைநீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகரில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் மறுசுழற்சி முறையில் அகற்றப்படுகிறது. இதனால் குப்பை கழிவுகள் ஓரிடத்தில் மலை போல் சேகரமாவது தடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநகரில் போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியை தூய்மையாக பராமரிக்கும் நோக்கில் சாலையோர மரங்கள், பூங்காக்களில் பசுமை வண்ண பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மாநகராட்சி சாலைகள் அழகுபட காட்சி அளிக்கிறது. வேலாயுத ரஸ்தா, விருதுநகர் ரோடு, திருவில்லிபுத்தூர் ரோடு பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட மரங்களில் பச்சை, மஞ்சள் நிற வண்ணத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயர், ஆணையாளர் தனிப்பட்ட முயற்சியில் இப்பணி மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது.

இதே போல் மாநகராட்சி பகுதியில் உள்ள காமராஜர் பூங்கா, காரனேசன் காலனி பூங்கா, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா புதுப்பொலிவு படுத்தப்பட்டுள்ளது.
பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் இந்த வண்ணங்களை வியப்புடன் பார்த்து செல்வதுடன் குப்பை கழிவுகளை கொட்டாமல் சுகாதாரமாக வைத்துள்ளனர். பாலங்கள், போக்குவரத்து ரவுண்டானாவில் பசுமை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளதால் போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள் செய்வதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர்.

இதனால் நகர் அழகாக காட்சியளிப்பதுடன் சுகாதாரமும் பராமரிக்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த பணிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.இது குறித்து மேயர் சங்கீதாஇன்பம் கூறுகையில், மாநகராட்சி பகுதியில் குப்பைகளே இல்லாத நிலையை உருவாக்க கடும் முயற்சி செய்து வருகிறோம். இதற்காக சாலையோர மரங்கள், பூங்காக்களில் பசுமை வண்ண நிறங்களில் பெயிண்ட் அடிக்கப்படுகிறது. இதன் மூலம் பொது இடங்களில் சுகாதாரம் பராமரிக்கப்படும். 5 ஆண்டுகளில் சிவகாசி பசுமை மாநகராட்சியாக மாற்றப்படும் என்றார்.

The post சாலையோர மரங்கள், பூங்காக்களில் பசுமை பெயிண்ட் சிவகாசி மாநகராட்சியை பசுமையாக்க புதுமுயற்சி appeared first on Dinakaran.

Tags : Sivakasi Corporation ,Sivakasi ,Sivakasi Municipal Corporation ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...