×

பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளோம்!: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க முடிவு.. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேட்டி

பாட்னா: 2024 நாடாளுமன்ற தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நிறைவுபெற்றது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பின் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மல்லிகார்ஜூன கார்கே, ராகுல், மம்தா பானர்ஜி, சரத்பவார் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய முதல்வர் நிதிஷ்குமார், நாடாளுமன்ற தேர்தலுக்கு பொதுவான செயல்திட்டத்தை வகுத்து வருகிறோம். பாஜகவை வீழ்த்த முதல் கூட்டத்தில் வியூகம் வகுத்துள்ளோம். எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைத்து 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் அடுத்த சில தினங்களில் நடக்கும். இன்று நடந்த கூட்டத்தில் ராகுல், கார்கே, மம்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது. இன்றைய கூட்டம் ஆக்கப்பூர்வமாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

The post பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளோம்!: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க முடிவு.. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Bihar ,Chief Minister ,Nitish Kumar ,Patna ,2024 parliamentary elections ,Dinakaran ,
× RELATED விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட...