×

டாக்டர் என்று கூறி இளம்பெண்களை ஏமாற்றி பலாத்காரம்: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் டாக்டர் என்று கூறி பல இளம்பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து நகை, பணத்தை மோசடி செய்த ஆசாமியை வயநாடு போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (45). டாக்டர் என்று கூறி திருமண ஆசை காட்டி பல இளம்பெண்களை ஏமாற்றி பணம், நகைகளை மோசடி செய்து வந்து உள்ளார். இதுதவிர மருத்துவமனை தொடங்கப்போவதாக கூறியும் பலரை ஏமாற்றி பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இந்தநிலையில் கல்பெட்டா பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்து உள்ளார்.

இதுகுறித்து இளம்பெண் கல்பெட்டா காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பல இடங்களில் பலரிடம் பல பெயர்களை இவர் கூறி வந்ததால் இந்த மோசடி ஆசாமியை கைது செய்வதில் போலீசாருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கல்பெட்டா ஏஎஸ்பி தபோஷ் பசுமதாரி தலைமையில் மோசடி நபரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையின் விசாரணையில் சுரேஷ் திருவனந்தபுரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். இவரிடமிருந்து டாக்டர் சின்னம் ஒட்டப்பட்ட ஒரு கார், ஸ்டெதாஸ்கோப், டாக்டர்கள் பயன்படுத்தும் கோட், 5 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் சுரேஷ் கேரளாவில் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணைக்கு பின் போலீசார் சுரேஷை கல்பெட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post டாக்டர் என்று கூறி இளம்பெண்களை ஏமாற்றி பலாத்காரம்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...