சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், அதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post 10, பிளஸ் 1 தேர்வு முடிவு வரும் 19ம் தேதி வெளியீடு: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.
