×

கலாஷேத்ரா கல்லூரியில் எழுந்த பாலியல் புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் நாளை நேரில் விசாரணை

சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் எழுந்த பாலியல் புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் நாளை நேரில் விசாரணை செய்ய உள்ளனர். நாளை கலாஷேத்ரா கல்லூரிக்குச் சென்று பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடையாறு கலாஷேத்ராவில் கல்லூரி மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரின் ஜாமின் மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் பாலியல் புகாரின் தொடர்பாகவும், மீதமுள்ள 3 ஊழியர்கள் மற்றும் பல்வேறு ஊழியர்கள் மீது பாலியல் புகார்கள் மாணவிகளால் அளிக்கப்பட்டு வந்தது. போராட்டத்தின்போதே மாணவிகள் அளித்த குற்றச்சாட்டு குறித்து சமூக வலைதளங்களில் ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

அடையாறு கலாஷேத்ராவில்பாலியல் புகார் குறித்து உதவி பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் அளித்த பாலியல் தொந்தரவு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலாஷேத்ரா முன்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தவிவகாரம் தொடர்பாக ஏற்கனவே மகளிர் ஆணையத்திற்கு வந்த நூற்றுக்கணக்கான புகார்கள் குறித்து விசாரணை நடத்திவரும் நிலையில் மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணையை துவங்கியுள்ளது.

வெளியான செய்திகள் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்தவிவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உள்ளது. இந்த விசாரணை தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் ஐஜி மகேந்திரகுமார் ரத்தோர் தலைமையிலான குழு நாளை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் நேரில் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்களின் விசாரணை மேற்கொண்டு 6 வாரத்திற்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post கலாஷேத்ரா கல்லூரியில் எழுந்த பாலியல் புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் நாளை நேரில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : State Human Rights Commission ,Kalashetra College ,CHENNAI ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...