×

லாரி மோதி இன்ஜினியர் பலி

திருப்புத்தூர், ஜூன் 4: திருப்புத்தூர் அருகே கே.ஆத்தங்குடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் பாரத் (23). இவர் மெரைன் இன்ஜினியராக கொச்சியில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் விடுமுறைக்கு ஊர் வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலையில் திருப்புத்தூரிலிருந்து கீழச்சிவல்பட்டிக்கு டூவீலரில் சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது, புதுக்கோட்டை ரோட்டில் இருந்து திருப்புத்தூர் நோக்கி வந்த டிப்பர் லாரி, டூவீலர் மீது மோதியது. இதில் பாரத் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்தார். பின்னர் அவரை மீட்டு திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருப்புத்தூர் நகர் போலீசார் லாரி டிரைவர் அருண் குமாரை(27) கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Larry Moti ,
× RELATED தலைமை தபால் நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்