ராமநாதபுரம், ஏப்.19: மண்டபம் வட்டார காங்கிரஸ் சார்பில் உச்சிப்புளி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. வட்டார தலைவர் விஜயரூபன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துகிருஷ்ணன், துல்கீப், கார்குடி சேகர் முன்னிலை வகித்தன. மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தொடங்கி வைத்தார். முன்னாள் தலைவர் ரெத்தினம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், காமராஜ், மாவட்ட செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.