ஆண்டிபட்டி, ஏப். 17:ஆண்டிப்டடி அருகே சக்கமபட்டி கல்கோவில் தெருவில் திமுக சார்பில் நீர்மோர், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்எல்ஏ மகாராஜன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்ப்பூசணி பழங்கள் வழங்கினார். அதேபோல் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வந்து வாங்கி பருகினர். இதில் திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜாராம், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராமசாமி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிவா, நகர இளைஞர் அணி அமைப்பாளர் பொன்னுத்துரை, ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் இளங்கோ மற்றும் நிர்வாகி–்கள் பலர் கலந்து கொண்டனர்.