- பெங்களூர்
- குஜராத்
- சின்னசாமி ஸ்டேடியம்
- பெங்களூரு
- பெங்களூர்
- ராயல் சேலஞ்சர்ஸ்
- டைட்டன்ஸ்
- பெங்களூர் சினசாமி ஸ்டேடியம்
- ஐபிஎல் தொடர்
- RCP
பெங்களூரு: ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 34வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-குஜராத் டைட்டன்ஸ் மோதுகின்றன. ஆர்சிபி 6 போட்டியில் 4 வெற்றி, 2தோல்வி என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் கோஹ்லி (247), கேப்டன் படிதார் (230), பில்சால்ட் (202) டிம் டேவிட் (173), அதிரடியில் அசத்தி வருகின்றனர். பவுலிங்கில் ஹேசல்வுட், புவனேஸ்வர்குமார், சுழலில் குருணல் பாண்டியா பார்மில் உள்ளனர். இன்று 5வது வெற்றியுடன் 2வது இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.
மறுபுறம் குஜராத் 6 போட்டியில், 3 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில் 265, ஜோஸ் பட்லர் 206 ரன் அடித்துள்ளனர். சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் , பிலிப்ஸ் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. பவுலிங்கில் பிரசித் கிருஷ்ணா , ரபாடா, முகமது சிராஜ், அசோக் சர்மா வேகத்திலும், ரஷித்கான் சுழலிலும் கைகொடுக்கின்றனர். இன்று ஜேசன் ஹோல்டர், குமார் குஷாக்ராவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது.
