×

எம்எல்எஸ் கால்பந்து மெஸ்ஸி தலைமையில் மயாமி அபார வெற்றி: வீழ்ந்தது சால்ட் லேக்

சாண்டி: எம்எல்எஸ் கால்பந்து போட்டியில் நேற்று, லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் ரியல் சால்ட் லேக் அணியை அபாரமாக வீழ்த்தியது. அமெரிக்காவில் எம்எல்எஸ் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. சாண்டி நகரில் நேற்று நடந்த போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணியும், ரியல் சால்ட் லேக் அணியும் மோதின. போட்டியின் துவக்கம் முதல் மயாமி அணி வீரர்கள் அற்புத ஆட்டத்திறனை வெளிப்படுத்தி பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

அந்த அணியின் ரோட்ரிகோ டி பால் 82வது நிமிடத்தில் முதல் கோல் போட்டு கரவொலி பெற்றார். மறு நிமிடமே அந்த அணியின் லூயிஸ் சாரெஸ் மேலும் ஒரு கோல் போட்டு வலுப்படுத்தினார். மாறாக, ரியல் சால்ட் லேக் அணி வீரர்களால் கடைசி வரை ஒரு கோல் கூட போட முடியவில்லை. அதனால் 2-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மயாமி அணி அபார வெற்றி பெற்றது. இன்டர் மயாமி அணி, 9 போட்டிகள் முடிவில் 5 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளது. நாஷ்விலி அணி, 8 போட்டிகளில் 6 வெற்றியுடன் 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் தொடர்கிறது.

Tags : MLS Football ,Miami ,Messi ,Salt Lake ,Sandy ,MLS ,Inter Miami ,Lionel Messi ,Real Salt Lake ,United States ,Sandy… ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி..!